வாலாஜாபாத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் தாலுகா அலுவலகம் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் சார்ந்த மக்கள் வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மனு அளிப்பதற்காகவும் அதிகாரிகளை சந்திப்பதாகவும் நாள்தோறும் வந்து செல்கின்றனர். ஒரு சில நேரங்களில் அதிகாரிகளை சந்திக்க காலதாமதம் ஆகும் நிலையில் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இங்கு அடிப்படை வசதிகள் எதுவும இல்லாததால் பொதுமக்கள் காத்திருக்கும் போது மிகவும் சிரமப்படுகின்றனர்.

நீண்ட நேரம் காத்திருக்கும் பொழுது உட்கார இடம் இல்லாததால் அலுவலகத்தின் முன் பகுதியில் அமர்ந்துள்ளனர். மேலும் ஒரு சில முதியவர்கள் நீண்ட நேரம் அமர்ந்து எழுந்திருக்க முடியாமல் அருகில் உள்ளவர்களின் துணை தேடும் அவல நிலையும் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் கிராம மக்களுக்கு போதிய அளவு இருக்கைகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: