ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தப்போராட்டத்தால் ராமேஸ்வரம் பகுதியில் சுமார் 800 விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 10,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
