பாலக்கோட்டில் யானைகளோடு இசைந்து வாழ விழிப்புணர்வு நிகழ்ச்சி

தர்மபுரி, பிப். 20: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் யானைகளோடும் இசைந்து வாழுதல் என்ற தலைப்பில் வனம், வன உயிரினம் மற்றும் வனத்தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருமல்வாடி (கோட்டூர்) அரசு மேல் நிலைபள்ளில் நடந்தது. யானைகளோடும் இசைந்து வாழுதல் குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. கோடுப்பட்டி, பிக்கிலி பெரியூர் மற்றும் கரகூர் ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தது. நிகழ்ச்சிகளில் பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன், கோவை தொண்டு நிறுவன தலைவர் மாரிமுத்து, வனவர்கள் சுரேஷ், முனுசாமி, ஸ்ரீராம், வனக்காப்பாளர்கள் பழனி பிரபாகரன் மற்றும் அருள்குமார் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், `யானைகளுடன் இசைந்து வாழுதல் என்பது மனிதர்களும், யானைகளும் தத்தமது வாழ்விடங்களை மதித்து, மோதல்களைத் தவிர்த்து, இயற்கை சூழலில் அமைதியாக இணைந்து வாழ்வதை குறிக்கிறது. காடுகளின் பாதுகாப்பிற்கு யானைகள் மிக முக்கியம், அவற்றை உணர்ந்து, மக்கள் தங்களின் விவசாய நிலங்களை யானை தடம் பகுதிகளில் இருந்து விலக்கி வைப்பது, ஊருக்குள் வருவதைத் தடுக்கும் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள வேண்டும். மேலும், காடு வளர்ப்பை ஊக்குவிப்பது ஆகியவை முக்கியமாகும்,’ என்றனர்.

Related Stories: