அவதூறு வழக்கில் ராகுல் குரல் பதிவுகளை கேட்டு சாவர்க்கர் பேரன் மனு: புனே நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புனே: கடந்த 2023ம் ஆண்டு லண்டனில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மறைந்த இந்துத்துவவாதி சாவர்க்கர் பற்றி பேசியிருந்தார். இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர், புத்தகத்தில் அப்படி எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்றார். மேலும் ராகுல்காந்திக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லண்டனில் ராகுல்காந்தி பேசிய ஆடியோ பதிவுகளை தங்களுக்கு அளிக்கக் கோரி சத்யாகி சாவர்க்கர் கடந்த செவ்வாய்க்கிழமை புனே நீதித்துறை மாஜிஸ்திரேட் முன்பு மனு தாக்கல் செய்தார். ராகுல்காந்தி மீதான வழக்கை நிரூபிக்க அந்த ஆதாரம் முக்கியமானது என்பதால் அதனை அதிகாரிகளிடம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரினார். மேலும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் நீதிமன்ற பதிவில் இருக்கும் பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க தடயவியல் அறிவியல் ஆய்வக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார். இதனிடையே ராகுல் தரப்பு வழக்கறிஞர், சத்யாகி சாவர்க்கரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

Related Stories: