ரூ.640 கோடி சைபர் மோசடி ஈடி வழக்கில் சிஏ-க்கு முன்ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: ஆன்லைன் பந்தயம், சூதாட்டம், பகுதி நேர வேலைகள், பிஷிங் மோசடி உள்ளிட்டவை மூலம் ரூ.640 கோடி அளவில் நடந்த சைபர் மோசடி குற்றச்சாட்டுகளை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இந்த குற்றத்தின் பெறப்பட்ட வருமானத்தை குறுக்கு வழியில் எடுக்க சில பட்டய கணக்காளர்கள் (சிஏ), நிறுவன செயலர்கள், கிரிப்டோ வர்த்தக நிறுவனங்கள் கூட்டு சேர்ந்துள்ளன. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிஏ பாஸ்கர் யாதவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது. இதை எதிர்த்து பாஸ்கர் யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்தது.

Related Stories: