கொல்கத்தா: மேற்குவங்கத்தின் புகழ் பெற்ற நறுமண அரிசி வகைகளை ஐநா அங்கீகரித்துள்ளதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி தன் எக்ஸ் பதிவில், “ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, இயற்கை பாரம்பரியம் மற்றும் பல்லுயிர்களை பாதுகாப்பதற்காக மேற்குவங்க அரசின் சமூக அடிப்படையிலான மாதிர் சிருஷ்டி திட்டத்தை அங்கீகரித்து சர்வதேச சான்றிதழை வழங்கி உள்ளது. மாநிலத்தின் மூன்று நறுமண அரிசி வகைகளையும் அங்கீரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாதிர் சிருஷ்டி திட்டம், நிலம், நீர்ப்பாசனம் மற்றும் பஞ்சாயத்துகள் தொடர்பான உத்திகளை ஒருங்கிணைக்கும் தனித்துவமான பார்வையை மாநில அரசு வடிவமைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமிதம் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மே.வங்கத்தின் நறுமண அரிசி வகைகளை ஐநா அங்கீகரித்துள்ளது: முதல்வர் மம்தா தகவல்
- மேற்கு
- வங்கம்
- ஐ.நா.
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- கொல்கத்தா
- மம்தா
- மேற்கு வங்கம்
- ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, இயற்கை பாரம்பரியம் மற்றும் பல்லுயிர்
