சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று (18.02.2026) சென்னை. தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பான Demantia India Alliance நிறுவனம் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மறதி நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகள் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார். இ.ஆ.ப. மற்றும் Demantia India Alliance நிறுவன தலைவர் மரு.ராதாமூர்த்தி இடையே கையெழுத்தானது.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு வரும் மறதி நோய் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிதல், மறதிநோய்க்கான மருத்துவ உதவி. மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றுதல், மறதி நோய் உள்ளவர்களை பராமரிப்பதற்கான பயிற்சி (மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள்), குடும்ப உறுப்பினர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான உதவி. பராமரிப்பு மையங்கள் அமைத்தல், மறதி நோய் பற்றிய ஆராய்ச்சி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக தேசிய முதியோர் நல மருத்துவ மையம் செயல்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் செயலாளர் மரு.உமா. இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினீத், இ.ஆ.ப., மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சுகந்தி இராஜகுமாரி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.சோமசுந்தரம், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.சித்ரா. தேசிய முதியோர் நல மருத்துவமனை இயக்குநர் மரு.தீபா, அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மரு.மாலையப்பன் மற்றும் உயரலுவலர்கள், தன்னார்வ அமைப்பு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
