தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27: இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கடல் கடந்தும் தாய்த்தமிழ் உறவுகளின் இன்னல்களை களைந்தது; இடைக்கால பட்ஜெட்டில் புகழாரம்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளிலும், பிற மாநிலங்களிலும் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்மொழியை கற்பிக்கும் அரசின் முயற்சிகளால், இதுவரை, 8 பிற மாநிலங்கள் மற்றும் 14 அயல்நாடுகளில் மையங்கள் தொடங்கப்பட்டு 1,400 மாணவர்கள் பயனடைந்துள்னனர்.

* தமிழ் பண்பாட்டின் வேர்களுடன் அயலக தமிழர்களின் தொடர்பை புதுப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் குடியேறிய பழந்தலைமுறைகளை சார்ந்த தமிழர்களில் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பண்பாட்டு பயண திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் ரியூனியன் தீவுகள், தென் ஆப்ரிக்கொ, உகாண்டா பிஜி, இந்தோனேசியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவுகள், கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை, பிரான்சு, ஜெர்மனி, நார்வே மற்றும் அமெரிக்கா ஆகிய 16 நாடுகளில் இருந்து 292 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா, வரலாற்று மற்றும் பண்பாட்டு சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, குறித்து விளக்கப்பட்டதன் மூலம், தத்தமது நாடுகளில் தமிழ்நாட்டின் பண்பாட்டு தூதுவர்களான அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

* முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் கண்ணியமாக வாழ்ந்திடும் வகையில், உயர்த்தப்பட்ட உதவித்தொகை, உணவுப் பொருட்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, திறன் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் என அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்கென இதுவரை ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* கடந்த 2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை மக்களுக்கு ரூ.197 கோடி மதிப்பிலான 40,601 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு முதல்வரின் கருணை, கடல் கடந்தும் தாய்த்தமிழ் உறவுகளின் இன்னல்களை களைந்திட உதவியது.

* அரசு மருத்துவமனையில் பிரசவ விகிதம் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்
மகப்பேசு மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கத்தோடு மாநிலத்தில் 130 அவசரகால மகப்பேறு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செல்பட்டு வருகின்றன. கருவுற்ற தாய்மார்களையும், பச்சிளஞ்சிசுக்களையும் பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக செயல்படுகிறது. அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திடும் பாதுகாப்பான பிரசவங்களில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனால் மகப்பேறு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 35 என்ற அளவிலும், சிசு இறப்பு விகிதம் ஆயிரம் சிசுக்களுக்கு 12 என்ற அளவிலும், தேசிய சராசரியைவிட மிகக் குறைவாகவே உள்ளது. ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை களைய, ‘ஊட்டச்சத்து உறுதிசெய்’ எனும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும் அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய, பாலூட்டும் தாய்மாருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

* காலை உணவுத் திட்டத்தில் 19.34 மாணவர்கள் பயன்
குடும்ப சூழல் காரணமாக அதிகாலையில் பள்ளி குழந்தைகளுக்கு உணவிட இயலாத ஏழை எளிய தாய்மார்களின் துயரம் துடைத்து, கனவுகள் நிரம்பிய நெஞ்சுடன் கல்வி சாலையில் அடியெடுத்துவைக்கும் அவர்தம் குழந்தைகள் பசித்த வயிற்றுடன் பாடம் படிக்க வரும் நிலையினை மாற்றி, பசி நீங்கி, ஊட்டம் பெற்று, உற்சாகத்துடன் பயின்றிட வகை செய்கிறது ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ இந்த திட்டத்தால் குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளது.
கற்றல் திறன் மேம்பட்டுள்ளது. 19.34 லட்சம் மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு ரூ.1,284 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல், பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாத்திடும் வகையிலும், அக்குழந்தைகள் இடைநிற்றல் இன்றி 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பினை தொடர, மாதம் ரூ.2000 வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.

* மாற்றுத்திறனாளிகளின் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி நிதி ஒதுக்கீடு
சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால நிதி அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது: 2022ம் ஆண்டில் ரூ.1,774 கோடி உலக வங்கியின் உதவியுடன் 6 ஆண்டுகளில் செயல்படுத்தக்கூடிய ‘தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தினை’ அறிமுகப்படுத்தி அனைத்து துறைகளின் சேவைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புற உலக சிந்தனை இல்லாதோருக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை வழங்கிடும் வகையில், உயர் திறன் மையம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு 2021-22 ம் ஆண்டில் ரூ.814 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடானது, 2025-26ம் நிதியாண்டில் ரூ.1,433 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த இடக்கால வரவு செலவு திட்டம் மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 5.40 லட்சம் மாணவர்களுக்கு உதவி
மகளிர் கல்வி போற்றி பாதுகாத்திட அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தை போலவே ஆண்களும் உயர்கல்வி பெற்றிட முன்னெடுக்கப்பட்டதே தமிழ் புதல்வன் திட்டம். ஆடவருக்கு உயர்கல்விக்காக மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் இதுவரை 5,40,511 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

* ரூ.6,045 கோடியில் வடசென்னை வளர்ச்சி திட்டம்
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பேருந்து நிலையங்கள் அமைத்தல், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கல்வி மற்றும் மருத்துவ உட்கட்டமைப்புப் பணிகள், ஏரிகள் மற்றும் குளங்கள் மேம்பாட்டுப் பணிகள், கடற்கரைகளை மேம்படுத்துதல், மீன் சந்தைகள் அமைத்தல், உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் விளையாட்டுக் கட்டமைப்புப் பணிகள், மின் மயானங்கள் அமைத்தல், துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகள் தரம் உயர்த்துதல் போன்ற பல்வேறு பணிகள் ரூ.6,045 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* எரிசக்தித்துறைக்கு ரூ.18 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை மேம்படுத்துவதற்காக புதிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத் தக்க எரிசக்தி கொள்கை விரைவில் வெளியிடப்படும். எரிசக்தி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.18 ஆயிரத்து 91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related Stories: