மணலியில் அனுமதியின்றி செயல்பட்ட இரும்பு குடோனுக்கு சீல்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மணலி: சென்னை மணலி மண்டலம் 19வது வார்டு, மாத்தூர் பகுதியில் ஏராளமான பழைய இரும்பு பொருட்களை கையாளும் தனியார் குடோன்கள் உள்ளது. இதில் சில இரும்பு குடோன்கள் சென்னை மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் இயங்குவதாக வார்டு கவுன்சிலர் காசிநாதன் மணலி மண்டல குழு கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், மண்டல உதவி ஆணையர்(பொறுப்பு) தேவேந்திரன் தலைமையில், உதவி பொறியாளர் தர், வருவாய் பிரிவு அதிகாரிகள் மாத்தூர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து மாசிலாமணி நகரில் பழைய லாரிகளை உடைத்து இரும்பு பொருட்களாக மாற்றும் மையமாக செயல்பட்டு வந்த தனியார் குடோன் அனுமதி இல்லாமல் இயங்குவது தெரிந்தது. இதையடுத்து அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர். ‘’அனுமதி இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள், குடோன்கள் குறித்து விரிவான ஆய்வு செய்து அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: