சென்னை: திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு இந்தி பெயர் வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர். வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர். தமிழ், ஆங்கிலத்திலும் இந்தியை எழுதி வைக்கும் இழிவான செயலில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர் என முதல்வர் கூறியுள்ளார்.
இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
- பாஜக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- திருச்சி ரயில்வே அலுவலகம்
- திருச்சி மண்டல ரயில்வே அலுவலகம்
- கர்தவ்யா
- வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள்
- EPFO
