பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 705 பெண்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். மகளிர் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழவும், தன்னிறைவுடன் தனது வாழ்வை வடிவமைத்திடவும் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’ வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் என்ற பெருமையை நாம் அடைந்துள்ளோம்.
