சென்னை : தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு 2:22 மணி நேரம் வசித்து முடித்தார். இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் இடைக்கால பட்ஜெட் வாசிக்கப்படும் நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்துள்ளனர். அதில் அவர் பேசியது..
*5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 வேளாண் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களில் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
*800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.178 கோடி செலவில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
*விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளில் உரிய நேரத்திற்கு திறக்கப்பட்டது.
*தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வேளாண் பரப்பு 3 லட்சம் ஏக்கர் அதிகரிப்பு.
*8,000 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 17,860 ஹெக்டேரில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் ரூ.80 கோடி மதிப்பிலான பனை பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
*496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
*தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
*மக்காச்சோளம் ஊக்குவிப்பு திட்டம் ரூ.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 10 லட்சம் ஏக்கரில் இருந்து 12 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
*தமிழ்நாட்டில் 4,150 சூரிய சக்தி பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு 2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
*எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் ரூ.229 கோடியில், 14 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் பயிர் செய்து 7 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
*மா, பலா, வாழை சாகுபடி பரப்பு விரிவாக்கம் திட்டத்தின் மூலம் 39,000 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். மரவள்ளி கிழங்கு, மல்லி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது; கொய்யா உற்பத்தியில் 2-வது இடம்.
*காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு கால்வாய் பகுதிகளில் சி மற்றும் டி கால்வாய்கள் ரூ.33 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
*விவசாயிகளிடம் 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் 137 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வணிகம் ஆகியுள்ளன.
*100 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
*20 லட்சம் ஏக்கரில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பயிர் பெருக்கத் திட்டம் ரூ.174 கோடியில் 24 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
*194 உழவர் சந்தைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது; 15 உழவர் சந்தைகள் புதிதாக உருவாக்கம். நாளொன்றுக்கு 4 லட்சம் பேர் ஊழவர் சந்தைகளுக்கு செல்கின்றனர்.
*சென்னை, கோவை ஆகிய இடங்களில் 4 உணவு பரிசோதனை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆண்டுகளில் 41 விளைப் பொருட்களுக்கு சமர்பிக்கப்பட்டு, 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
*தக்காளி, மா, பலா உள்ளிட்டவைகள் சாகுபடி மதிப்பு திட்டங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரை மானியம். குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
*குட்டை ரக பனை மரத்தை உருவாக்க ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலை. மூலம் 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
*விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்படுகிறது. 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.
*நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம்; இதர விவசாயியகளுக்கு 75% மானியம். நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், 900 மெ. டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
*30,000 விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல், பயிர் சாகுபடி, தேனீ வளர்ப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. வேளாண் சார்ந்த கடன்களுக்கு வட்டி மானியம் மற்றும் வட்டி ஊக்கத்தொகை ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
*கடந்த 5 வேளாண்மை நிதிநிலை அறிக்கைகளில் ரூ.1.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் சார்பில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் இயங்கி வருகின்றன.
*தமிழ்நாடு வேளாண் பல்கலை.க்கு ரூ.3,065 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தேவையான இடுபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
*33 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 20 லட்சம் விவசாயிகள் உழவர் கைபேசி செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
*2026-27 நிதியாண்டு வேளாண் துறைக்கு ரூ.47,000 கோடி நிதி ஒதுக்கீடு
