சத்தியமங்கலம்: பவானிசாகர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று சத்தியமங்கலத்தில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முத்தரசன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த கூட்டத்தில் முத்தரசன் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசுவதை நான் கூர்ந்து கவனிப்பேன். அவர் நாகரீகமற்ற முறையில் எப்போதும் பேசியது கிடையாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அநாகரீகமாக பேசுகிறார். வீணாக முதல்வர் குடும்பத்தை வம்புக்கு இழுக்கிறார். அதிமுகவின் கதை முடிந்து விட்டது. எதிர் காலத்தில் அதிமுக என்ற கட்சி இருக்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பீகார், மகாராஷ்டிரா போல் தமிழ்நாட்டை பாஜவினர் மாற்ற முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
