தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பால் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது: முதலமைச்சர் குற்றச்சாட்டு

மதுரை: திமுக, கூட்டணி வேட்பாளர்கள் 9 பேருக்கு வாக்கு சேகரித்தார். அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆருக்கு ஆதரவு திரட்டினார். மதுரை வடக்கு வேட்பாளர் தளபதிக்கும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். ‘தமிழ்நாட்டின் பண்பாடு தலைநகரம் மதுரை. ஆண்டு முழுக்க திருவிழாக்கள் நடக்கும் ஊர். எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஊர். தமிழ் இலக்கியத்தில் சிறப்பான இடத்தை பிடித்த ஊர். அன்பு, பண்பு, விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற, பாசமிக்க மனிதர்கள் வாழும் ஊர் நம் மதுரை. மதுரையின் வளர்ச்சி என்றாலே திமுகதான். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பயன்கள். ஏறுதழுவுதல் அரங்கம், வேலுநாச்சியார் பாலம் அமைப்பு. மதுரை எய்ம்ஸ் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நாங்கள் அறிவித்த ஒன்றரை வருடத்தில் சென்னையில் கலைஞர் உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்தோம்.தமிழ்நாட்டின் மீதுள்ள வெறுப்பால் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட ஒன்றிய பாஜக அரசு மறுக்கிறது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: