பாத பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

*கொஞ்சம் தயிரில் ஒரு மூடி எலுமிச்சை சாற்றைக் கலந்து கால், பாதம், விரல் இடுக்குகளில் தேய்த்து பத்து நிமிடம் ஊறிய பின் வெந்நீரில் கழுவினால் கால் மென்மையாக இருக்கும்.

*கஸ்தூரி மஞ்சளையும், பால் ஏடையும் கலந்து கால், பாதம், குதிகால்களில் தடவி, பின் கழுவி வர பனி, குளிர்காலங்களில் தோலில் ஏற்படும் சாம்பல் பூத்தது போன்ற சரும வறட்சியை போக்கும்.

*சிலருக்கு பாதங்களில் அடிக்கடி அரிப்பு உண்டாகும். அதற்கு பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து பாதங்களில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய படிப்படியாக அரிப்பு குணமாகும். அதை கோடைக் காலங்களில் செய்வது நல்லது.

*தினமும் குளித்த பின் தேங்காய் எண்ணெய் அல்லது லிக்விட் ஃபாரபினை தேய்த்தால் கால் பித்த வெடிப்பின்றி, சொர சொரப்பில்லாமல் மென்மையாக இருக்கும்.

*சுத்தமான விளக்கெண்ணெயையும் மஞ்சள் தூளும் சேர்த்து விழுதாக்கி இரவு படுக்கும் முன் காலில் பித்தவெடிப்பு, கால் ஆணி உள்ள இடத்தில் தடவிக் கொண்டு படுத்து பின் காலையில் கழுவ, பித்த வெடிப்பு, ஆணி மறையும்.

*ஓர் அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிதளவு உப்பு, எப்சம் உப்பு, ஒரு தேக்கரண்டி வாசனை எண்ணெய் விட்டு, பாதங்களை அதில் அமிழ்த்தி வைத்து சற்று ஊற விடவும். சுத்தமான பிரஷ்ஷால் தேய்த்துவிட்டு, துடைத்த பின் மாய்ச்சுரைசர் தடவி வர கால் மென்மையாக பட்டு போல் இருக்கும்.

*கடைகளில் கிடைக்கும் காஸ்மெட்டிக் வாக்ஸை வாங்கி கடுகு எண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் சிறிதளவு மெழுகுப் போட்டு உருக்கியதும் இறக்கி நன்றாகக் குழைத்து சூடு ஆறிய பின் தினமும் பாதங்களில் இதை தடவி வர பாதம் பூப்போல மிருதுவாகி விடும்.

*பச்சை மஞ்சளை அரைத்து, குளிக்கும்போது உடலில், பாதத்தில் தேய்த்து குளித்து வர, சருமம், பாதம் ஈரப்பதத்துடன் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*கற்றாழை ஜெல் அல்லது நைட் க்ரீம் அல்லது மாய்ச்சுரைசரை இரவில் தடவி, சாக்ஸ் போட்டுக் கொண்டு படுக்க, தோலின் ஈரப்பதம் காக்கப்படுவதுடன் சுருக்கம், கோடுகள், வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Related Stories: