மார்த்தாண்டம் அருகே மீன் கழிவுடன் வந்த கூண்டு லாரியை மடக்கி பிடித்த பொதுமக்கள்: ரூ.25 ஆயிரம் அபராதம்

 

மார்த்தாண்டம்: கேரளாவில் இருந்து மீன் கழிவுகள் கொண்டு வந்த கூண்டு லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். கேரளாவில் இருந்து மீன் மற்றும் ஆஸ்பத்திரி கழிவுகளை தனியார்கள் காண்ட்ராக்ட் எடுத்து கூண்டு லாரி மூலம் நள்ளிரவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டு வந்து ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதனால் பல்வேறு விதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் திருவனந்தபுரத்திலிருந்து கூண்டு லாரி களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்து சென்று கொண்டிருந்தது. சிராயன்குழி பகுதியில் செல்லும்போது துர்நாற்றம் பலமாக வீசியது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

கூண்டு லாரியின் பின்பகுதியை திறந்து பார்த்தபோது மீன் கழிவுகள் இருப்பது தெரிய வந்தது. திறந்ததும் துர்நாற்றம் மேலும் பலமாக வீசியது. உடனடியாக மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது, போலீசார் வந்து கூண்டு லாரியை பறிமுதல் செய்து, உண்ணாமலைக்கடை டவுன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்தனர். செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ் மீன் கழிவுகள் கொண்டு வந்த கூண்டு லாரிக்கு ரூ.25000 அபராதம் விதித்தார். லாரி உரிமையாளர் அபராத தொகையை செலுத்திய பிறகு கூண்டு லாரி மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது

Related Stories: