திருத்துறைப்பூண்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி, பிப். 14: தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் மற்றும் அரசு கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5ம்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 9 மற்றும் 10ம்தேதிகளில் மாவட்ட தலைநகரில் மறியல் போராட்டம் நடைபெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் பாலசந்தர் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் வட்ட நிர்வாகிகள் மகளிர் அணி அமைப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். இடையூர் சரக அமைப்பாளர் அபிராமி நன்றி கூறினார்.

 

Related Stories: