என்சிஇடி நுழைவுத்தேர்வு மார்ச் 10க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 17ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.nic.in/ncet/ எனும் வலைத்தளம் வழியாக மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய மார்ச் 12, 13, 14ம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். என்சிஇடி நுழைவுத் தேர்வானது தமிழ் உள்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக நடத்தப்பட உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் வெளியீடு, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Related Stories: