மதுரை, பிப். 13: மதுரை, காந்தி மியூசியத்தில் செயலாளர் நந்தாராவ் தலைமையில் காந்தியசிந்தனை கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. காந்திய வழியில் சிக்கல் தீர்வு என்ற தலைப்பில் மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், தனி மனித மேம்பாட்டுக்கான காந்திய மகாவிரதங்கள்என்ற தலைப்பில் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் மற்றும் யாதவா கல்லூரி பேராசிரியை ஆதிலட்சுமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாணவி நாகமாரி வரவேற்றார். மாணவி சசிகலா நன்றி கூறினார். முன்னதாக கல்லூரி மாணவ, மாணவியர் அருங்காட்சியக வளாகத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். கல்லூரி பேராசிரியர் ஜெயபாலன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
