ஜெயங்கொண்டம், பிப்.13: அரியலூர் ஆயுதப்படை மைதானத்தில் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த டூவீலர்கள் ஏலம் வருகிற 14ம் தேதி நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணையின் போது வாகனங்களை யாரும் உரிமம் கோரப்படாமல், அரசுடமையாக்கப்பட்ட 44 இருசக்கர வாகனங்களை பிப்ரவரி 12 ம் தேதி (வியாழக்கிழமை) அன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காகவும், பணி சூழ்நிலை காரணமாகவும் தேதி மாற்றப்பட்டு வரும் 14 ம் தேதி (சனிக்கிழமை) பொது ஏலம் நடைபெறும் என மாற்றி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
