அமெரிக்காவில் போலீஸ் கார் மோதி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஒப்புதல்!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போலீசாரின் கார் மோதி இந்தியாவைச் சேர்ந்த பெண் உயிரிழந்த வழக்கில், குடும்பத்தினருக்கு ரூ.260 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளது. கடந்த 2023ல் சாலையைக் கடந்த ஜானவி கந்துலா (23), அவசரப் பணிக்காக வேகமாக சென்ற போலீஸ் கார் மோதியதில் உயிரிழந்தார். கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை வாகனம் மோதியதில் பலியான ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஹ்னவி கந்துலா குடும்பத்துக்கு ரூ.265 கோடியை வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையடுத்து ரோந்து வாகனத்தில் இருந்த அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாகனத்தை ஓட்டியவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதுடன் 5 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதனிடையே, போலீஸ் அதிகாரி மீதும், நகர நிர்வாகம் மீதும் 2004 ல் 110 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சியாட்டில் நகர அதிகாரிகள் ஜானவி கண்டுலா குடும்பத்துக்கு 262 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. காப்பீடு மூலம் இழப்பீடு தொகை செலுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக சியாட்டில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஜானவி கண்டுவா மரணம் மனதை நொறுங்கச் செய்கிறது. இந்த இழப்பீடு மூலம் அவரது குடும்பத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: