இந்திய விமானப்படை நவீன போர் விமானங்களை வாங்கும்: ஏர் மார்ஷல் கபூர் தகவல்

புதுடெல்லி: “போர் வலிமையை அதிகரிக்க இந்திய விமானப்படை நவீன புதிய தலைமுறை போர் விமானங்களை வாங்க உள்ளது” என இந்திய விமானப்படையின் துணைத்தலைவர் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் மிகப்பெரிய வான்வழி போர் பயிற்சி, பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. வாயு சக்தி 2026 எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த போர் பயிற்சியில், இந்திய விமானப்படையின் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் கலந்து கொண்டு, வான் சக்தி, தாக்குதல் திறன் மற்றும் போர் தயார் நிலைகளை வௌிப்படுத்த உள்ளன.

இந்நிலையில் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நாகேஷ் கபூர், “நடைபெற உள்ள வாயு சக்தி போர் பயிற்சியில் ரஃபேல், சுகோய்-30, மிக்-29, தேஜாஸ், ஜாகுவார் உள்பட பிற போர் விமானங்கள் மற்றும் அப்பாச்சி, சினூக் போன்ற ஹெலிகாப்டர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தும். இது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையின் வெற்றிகரமான பங்கை எடுத்துகின்றன” என்றார். தொடர்ந்து பேசிய ஏர் மார்ஷல், “போர் வலிமையை அதிகரிக்கும் விதமாக இந்திய விமானப்படை மேலும் பல புதிய தலைமுறை நவீன போர் விமானங்களை வாங்க உள்ளது. இதுகுறித்து பரிசீலித்து வருகிறோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.

Related Stories: