உயர்கல்வி ஆணைய மசோதா நாடாளுமன்ற குழு அமைப்பு

புதுடெல்லி: யுஜிசி உள்ளிட்ட வெவ்வேறு ஆணையங்களுக்கு பதிலாக உயர்கல்விக்கென ஒரே ஆணையத்தை கொண்டு வருவதற்கான விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தற்போது இதற்கான 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக பாஜ எம்பி புரந்தேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் மக்களவை உறுப்பினர்களில் திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்பிக்களும், மாநிலங்களவை எம்பிக்களில் அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இக்குழு மாநில அரசுகள், கல்வி அமைப்புகள் உள்ளிட்ட பங்குதாரர்களிடம் பரிந்துரைகளை பெற்று விவாதம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்.

Related Stories: