சென்னை: தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளராக நாசரேத் வே.ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளராக நாசரேத் வே.ரஞ்சன் நியமிக்கப்படுகிறார். ஒட்டப்பிடாரம், திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தெற்கு மாவட்டத்திற்குள் அடங்கும். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.எஸ்.ரமேஷ் தொடர்ந்து பணியாற்றுவார். கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் வடக்கு மாவட்டத்திற்குள் அடங்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளர் நியமனம் வைகோ அறிவிப்பு
- Waiko
- தலைவர்
- தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
- சென்னை
- நசரேத் வெய்
- தலை
- தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
- வைகோ
- ரஞ்சன்
- பிரபலமான பொதுச் செயலாளர்
- விகோ
- ஓட்டப்பிடாரம்
- திருவைகுண்டம்
