காங்கிரசில் உச்சக்கட்ட கோஷ்டி பூசல்: புதுச்சேரி காங் தலைவர் வைத்திலிங்கம் வீடு முற்றுகை

 

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் காரணமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. புதுச்சேரி முதலமைச்சர் வேட்பாளராக வைத்திலிங்கத்தை முன்னிறுத்த ராகுல்காந்தி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்திலிங்கத்தை முன்னிறுத்துவதற்காக ஏற்கெனவே முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடியும் நிலையில் காங். கோஷ்டி பூசலால் போட்டியிடும் தொகுதிகள் கூட அறிவிக்கப்படவில்லை. 5 ஆண்டு முதலமைச்சராக இருந்த நாராயணசாமி கடந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டார். தற்போது திடீரென தேர்தலில் போட்டியிட நாராயணசாமி முயற்சிப்பதால் புதுச்சேரி காங்கிரசில் குழப்பம் நீடித்து வருகிறது. புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரசில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லித்தோப்பு பகுதியில் போட்டியிட நாராயணசாமிக்கு சீட் மறுத்ததால் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். வைத்திலிங்கத்துக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களையும் எழுப்பி நாராயணசாமி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Related Stories: