ரங்கசாமி சித்து விளையாட்டு கதறும் சிட்டிங் எம்எல்ஏக்கள்

 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, எந்த தொகுதி யாருக்கு என்பது கடைசி வரைக்கும் தெரியாது. அவருடன் சேர்ந்து பயணிப்பவர்கள் கூட யாருக்கு சீட் வழங்க உள்ளார் என்பதை கணிக்க முடியாது. இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வருடன் வெற்றி பெற்ற 9 எம்எல்ஏக்களில் காரைக்காலை சேர்ந்த அமைச்சர் திருமுருகனும், முன்னாள் அமைச்சர் சந்திர பிரியாங்கா எம்எல்ஏவுக்கும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றபடி புதுவையில் உள்ள 7 எம்எல்ஏக்களில் 2 பேர் அமைச்சர்கள் ஆவர். இரண்டு அமைச்சர்களுக்கு சீட் கிடையாது என்பது அவர்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. மற்றபடி மீதியுள்ள 5 எம்எல்ஏக்களில் 2 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கிறாராம். மூன்று எம்எல்ஏக்களுக்கு சீட் கிடையாதாம்.

ஏம்பலம் தொகுதியில் வெற்றி பெற்ற லட்சுமிகாந்தனுக்கும், அவரது சொந்த சித்தப்பாவான ராஜவேலுக்கும் சீட் கிடையாது என்பதால் கடும் அதிர்ச்சியில் உள்ளார்களாம். அவரது ஆதரவாளர்கள் தொகுதியில் பொங்கி எழுகிறார்களாம். இதுதொடர்பாக எந்த எம்எல்ஏவுக்கும் தனது கட்சியின் அங்கீகாரமான ஏ மற்றும் பி பார்ம் கொடுக்கவில்லையாம். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று கொடுக்க இருப்பதால் சிட்டிங் எம்எல்ஏக்கள் கதறி வருகின்றனர். கடைசி நேரத்தில் அறிவித்தால் யாரும், மாற்று கட்சிக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்ற கணக்கை ரங்கசாமி போடுகிறார். இது தான் அவரது அரசியல் சித்து விளையாட்டு என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

 

Related Stories: