ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.32.10 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலநாளின்போது, ஆனைமலை மற்றும் கோட்டூர், ஒடையக்குளம், வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 87 விவசாயிகள் மொத்தம் 243 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை தரம் பிரித்து, குவித்து வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

இதில் முதல் தரம் 243 மூட்டை கொப்பரை ரூ.174.26 முதல் ரூ.185 வரையிலும் 398 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ரூ.148.60 முதல் ரூ.168.60 வரை என 245 குவிண்டால் கொப்பரை மொத்தம் ரூ.32.10 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை 8 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: