சென்னை: பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வு தொடங்கியது. இன்று முதல் 3 நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்ள உள்ளன. பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி குறித்து ஆய்வு தொடங்கியது. மெட்ரோ ரயிலை 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இயக்கி ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் அளித்து அனுமதி பெற்ற பின் சேவையை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
