தடுப்புச் சுவர்களில் நோட்டீஸ்; வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 

கரூர், பிப். 11: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, சுங்ககேட் தாந்தோணிமலை, காந்திகிராமம், சுக்காலியூர் ஆகிய முக்கிய சாலைகளின் மைய தடுப்புச் சுவரில் தனியார் அமைப்புகள் மற்றும் சில கட்சிகளின் சார்பில் விளம்பரங்கள் மற்றும் நோட்டீஸ்கள் ஒட்டப்படுகிறது. இவை அனைத்தும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனை முற்றிலும் கட்டுப்படுத்தவும், தேவையான விழிப்புணர்வை வழங்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர்.

Related Stories: