மண்டல இணை இயக்குனர் ஆய்வு

குளித்தலை, பிப். 5: குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில், திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரியில் உள்ள கோப்புகளை சரிபார்த்த அவர், கல்லூரியில் மாணவர்களுக்கு அமைக்கப்பட்டிருக்கும் உணவு விடுதியை ஆய்வு செய்தார். மேலும் வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கல்லூரி முதல்வர் சுஜாதா, மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு, தாவரவியல் துறை தலைவர் வேணுகோபால், தமிழ்துறை தலைவர் வைரமூர்த்தி, விலங்கியல் துறை தலைவர் பாபுநாத், வேதியியல் துறை தலைவர் பாலசுப்ரமணியம், கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் புவனேஸ்வரி, கணினி துறை தலைவர் தாமஸ் பெலிக்ஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Related Stories: