ஊட்டியில் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக கண்களை கட்டிக்கொண்டு போராட்டம்

 

ஊட்டி, பிப். 11: யுஜிசி கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தி உள்ள மாத ஊதியம் ரூ.57 ஆயிரத்து 800ஐ வழங்க வேண்டும். அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் 12 மாத ஊதியம் வழங்க வேண்டும். பிஎப், இஎப் பிடித்தம் செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் நல சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 180 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 8,700 கவுரவ விரிவுரையாளர்கள் இதில் பங்கேற்றுள்ளளனர். நேற்று முன்தினம் முதல் கால வரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை துவக்கினர். நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நுழைவாயில் முன்பு கருப்புத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: