எமரால்டு பகுதியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

 

ஊட்டி, பிப். 11: ஊட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குந்தா மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எமரால்டு பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளையொட்டி எமரால்டு பகுதியில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக சுமார் 20 விளையாட்டு குழுவினருக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. நலிவுற்ற ஏழை, எளியோருக்கு மருத்துவ செலவுக்காக நிதி வழங்கப்பட்டது. தெருமுனை பிரசாரமும் துவக்கப்பட்டது.

Related Stories: