சின்னச் சின்ன ஹெல்த் டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

*நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டால் நன்றாகப் பசிக்கும்.

*நீரிழிவு நோயாளிகள் வெந்தயக்கீரை சாப்பிடுவது நல்லது.

*முட்டைக் கொசு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண்கள் ஆறிவிடும்.

*சிறிது பனங்கற்கண்டை இளநீரில் கரைத்துக் குடிப்பதால் சிறுநீர் எரிச்சல் குணமடையும்.

*நிழலில் உலர்த்திய மாம்பூவைக் கஷாயம் வைத்துக் குடிக்க சீதபேதி நிற்கும்.

*ஆடாதொடை, துளசி, தூதுவளை, தும்பை ஆகிய மூலிகை இலைகளை கசாயம் வைத்து குடிக்க கபத்தைப் போக்கும்.

*முருங்கைப் பூ, முட்டை இரண்டும் சேர்ந்து பொரியல் செய்து சாப்பிட உடல் உறுதி பெறும்.

*நீரிழிவு நோயாளிகள் வாழைக்காயை அடிக்கடி சாப்பிடலாம்.

*மணத்தாக்காளிப் பழத்தை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் இளமையும் வசீகரமும் போகாது.

*மந்தாரைப் பூவைக் கஷாயம் தயாரித்துப் பருகி வந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

*துளசி விதையை அரைத்து உட்கொள்ள பிள்ளைப் பேற்றிற்கு பின் ஏற்படும் அடிவயிற்றுவலி போய்விடும்.

*மணத்தக்காளிக் கீரையை சூப் தயாரித்து குடித்தால் உணவுப் பாதையில் ஏற்படும் குடல் புண்கள், வாய்ப்புண்கள் எல்லாம் சரியாகும்.

*எருக்கம்பூவின் பாலை முள் குத்திய இடத்தில் தடவ, முள் இருந்தால் வெளியே வந்துவிடும் வலியும் போய்விடும்.

*அரளிப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டால் தலையில் பேன்கள் போய்விடும்.

*நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் திப்பிலியை வாங்கிப் பொடி செய்து, சிறிது பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் ஏற்படும் வலி குணமாகும்.

*பக்கவாத நோய் வராதிருக்க வாழைப்பழத்தை தொடர்ந்து உண்ண வேண்டும்.

*கால் சுளுக்குக்கு செம்மண், உப்பு, புளி மூன்றையும் நீரில் கரைத்துக் காய்ச்சி காலில் பற்றுப்போட சுளுக்கு போய்விடும்.

*அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வர வயிற்றுப் பூச்சிகள் அழிந்துவிடும்.

*பவளமல்லிகையின் இலைகளை கசக்கிச் சாறெடுத்து சமபங்கு தேன் கலந்து ஒரு அவுன்ஸ் அளவு தினமும் இருவேளை பருகினால் காய்ச்சல் குணமடையும்.

*மிளகு, சீரகம் சம அளவு எடுத்து தூளாக்கி தினமும் கால் ஸ்பூன் சாப்பிட செரிமானக் கோளாறுகள் குணமடையும்.

தொகுப்பு: விசாலாட்சி கண்ணன்

Related Stories: