நன்றி குங்குமம் தோழி
சீனாவில் உள்ள சாங்கியாங் என்ற பள்ளத்தாக்குதான் கிவிப்பழத்தின் பூர்வீகம். சீன நெல்லிக்காய் என்றொரு பெயரும் இதற்குண்டு. உலகில் சத்து அதிகம் உள்ள பழம் இதுதான் என விஞ்ஞானம் நிரூபித்துள்ளது.கெட்ட கொழுப்பையும், மன அழுத்தத்தையும், புற்று நோயையும் கட்டுப்படுத்தும் மூலப் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் ‘சி’, பொட்டாசியம் இதில் உள்ளன. கூடவே நார்ச்சத்து அடங்கிய உயர்ந்த உன்னதமான பழம் இது.
தினம் இரண்டு கிவிப்பழம் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் பெறும். தொடர்ந்து புகைப்பதாலோ அல்லது வேறு வகையிலோ உருவாகும் நைட்ரேட்டால் புற்று ேநாய் ஏற்பட வாய்ப்பு அதிகம். இப்பழம் சாப்பிட்டு வந்தால் அம்மாதிரியான நோய் அகற்றப்படுகிறது.
வெண் குஷ்டம் மற்றும் தோல் நோய் வருவதை தடுக்கிறது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இப்பழம் நல்லது. கண்களை பெரிதும் பாதுகாப்பதோடு, பார்வை இழப்பையும் தடுக்கிறது. உடம்பில் உள்ள நல்ல கொழுப்பை தக்க வைக்கிறது.
இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயை விரிவடையச் செய்வதில் இதன் பங்கு மிகுதியானது. ரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது.வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்கு வியர்வை அதிகம் வெளியேறி நீரிழப்பு ஏற்படும். அந்த நீரிழப்பு இப்பழம் சாப்பிடுவதால் தவிர்க்கப்படுகிறது.
தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி
