சென்னை: பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் இயக்க இறுதி ஆய்வை நாளை மேற்கொள்ளப்படுகிறது என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயிலை இயக்க நாளை முதல் 3 நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவரி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பூந்தமல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயிலை 80-90 கி.மீ. வேகத்தில் இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
பூந்தமல்லி-வடபழனி வரையிலான வழித்தடத்தில் ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட்ட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். முதற்கட்டமாக பூவிருந்தவல்லி முதல் வடபழனி வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்படுகிறது.
