எப்ஸ்டீன் பைல்ஸ் தேசத்திற்கே அவமானம் வாயை திறங்க மோடி…அமைச்சர் மனோதங்கராஜ் கண்டனம்

 

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எப்ஸ்டீன் பைல்ஸ் ஒரு மிகப்பெரிய தீவிரமான பிரச்னை. அங்க இருக்கக்கூடிய நீதிமன்றம் இது குறித்து பல தகவல்களை சொல்லி இருக்கிறது. எப்ஸ்டீன் பைல்ஸ்-ல் தன்னுடைய பெயர் வந்த பிறகு நம்ம பிரதமர் வந்து வாயே திறக்க மாட்டார், பல விஷயங்களில். அதுவும் அவர் மீது குற்றச்சாட்டு வருகின்ற நேரத்தில், பாஜ அரசு மீது குற்றச்சாட்டு வருகின்ற நேரத்தில் எந்த பதிலும் பேச மாட்டார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீண்ட காலமாக இருக்கக்கூடிய மரபு, பிரதமர் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பதிலளித்து பேசுவார். இந்த முறை அவர் பதிலளித்து கூட பேசல, அதுக்கு அவர் சொன்ன காரணம் ரொம்ப வருத்தமானது. தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய இரண்டு பெண் எம்.பி.,க்களை கண்டு பயந்து அவர் வராதது மாதிரி ஒரு பதிலை கூறியிருக்கிறார்கள்.

எப்ஸ்டீன் பைல்ஸ்ல அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது இந்த தேசத்திற்கே அவமானம், துரதிர்ஷ்டவசமானது. இதிலும் பிரதமர் மவுனம் சாதிக்கிறார் என்று சொன்னால் அது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அவர் மவுனத்தை துறந்து இதில் பதில் சொல்லி ஆக வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: