கோயில் தொகுதிகளை டார்கெட் செய்யும் பாஜ: அப்செட்டில் அதிமுக

 

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட மிக சொற்ப வாக்குகள் (1,506) வித்தியாசத்தில் வென்ற அதிமுக பாண்டியன், 2021ல் தன்னை எதிர்த்து களமிறங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை வீழ்த்தினார். கோயில் நகரமான சிதம்பரத்திற்கு இதுவரை நலத்திட்டங்களை முழுமை செய்யாத சிட்டிங் பாண்டியன், மீண்டும் சீட்டு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்தாலும், அது இம்முறை எடுபடாத நிலையில்தான் முடிய வாய்ப்புள்ளது என்பதே தொகுதி மக்களின் கருத்தாக உள்ளதாம்.

அதாவது தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பிரசித்தி பெற்ற கோயில்கள் உள்ளதோ, அந்த தொகுதிகளை எல்லாம் பாஜ குறிவைத்து காய்நகர்த்தி வருகிறதாம். அந்த வகையில் இந்த முறை கண்டிப்பாக சிதம்பரமும் தங்களுக்கே என பாஜவினர் மார்தட்டி வருகிறார்களாம். இதுதொடர்பாக டெல்லி பவர்புல் தலைமை மூலமாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் இலைக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பாஜ களமிறங்கிய நிலையில், அதையே சாக்காக வைத்து கறார் காட்டுகிறதாம்.

சிதம்பரத்தில் மலரத் துடிக்கும் தாமரையால் அதிமுக சிட்டிங் பிரதிநிதி கவலையில் உள்ளதோடு, அங்குள்ள இலை கோஷ்டியே ஏன்டா கூட்டணி வச்சோம் என கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். அதேவேளையில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவும் தன்பங்குக்கு சிதம்பரத்தை கேட்டு சிக்கலை அதிகப்படுத்தி வருவதால் அதிமுகவின் சிட்டிங் தொகுதி சிதைந்து போகும் நிலையே தற்போதைய சூழலாம்.

Related Stories: