கொங்கு மண்டலத்தில் அடி மேல் அடி…

 

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஓட்டை விழுந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, திமுகவின் கோட்டையாக மாறி உள்ளது. கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ள அமைச்சர் சக்கரபாணி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் அதிமுகவுக்கு கடும் போட்டி கொடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என எந்த தேர்தலிலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக வெற்றிபெறவில்லை. அதனால், இம்முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என கோவையை சேர்ந்த தொழில்முனைவோர் கால்களில் விழுந்துள்ளனர்.

தேர்தல் அறிக்கைக்கான கருத்து கேட்பு எனக்கூறி, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சி.வி.சண்முகம், உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இரண்டு நாட்கள் கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். இதில், விவசாயிகள், தொழில்துறையினர், நெசவாளர்கள், கல்வி நிறுவனம், மருத்துவம், ஐ.டி, குவாரி உரிமையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்ற தொழில்முனைவோர் தங்களது அதிருப்தியை கடுமையாக ெவளிப்படுத்தியுள்ளனர்.

அதாவது, ‘‘ஜி.எஸ்.டி என்ற பெயரில் ஒன்றிய அரசு ‘வரி தாக்குதல்’ நடத்துவதால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. அவர்களிடம் மன்றாடினாலும் எதுவும் நடப்பதில்லை. ஆனால், நீங்கள், அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, எங்களுக்கு எதுவுமே செய்வதில்லை. இப்போது வந்து, பெயரளவுக்கு கருத்து கேட்கிறீர்கள். நாங்கள் எங்கள் கோரிக்கையை சொன்னால், அதை நிறைவேற்றி விடுவீர்களா… என்ன…?’’ என கடுமையாக வறுத்தெடுத்துள்ளனர். இதனால், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, முகத்தை தொங்கப்போட்டு, வெளியேறியுள்ளது. அவர்கள், ‘‘கொங்கு மண்டலத்தில் இப்படி அடி மேல் அடி விழுகிறதே…!’’ என புலம்பி தள்ளியுள்ளனர்.

Related Stories: