கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜ சார்பில் மோடி முகாம் என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் ஒன்றிய அரசின் நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, சாலையோர வியாபாரிகளுக்குப் பிரதமர் மோடியின் உருவம் பதித்த நிழற்குடைகளும் வழங்கப்பட்டன. அப்போது பேசிய வானதி சீனிவாசன் ‘எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சரானதும், ஒவ்வொரு வீட்டிற்கும் பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்துச் செல்வோம்’ என்றார்.
