45 பேர் கைது 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா

பெரம்பலூர்,பிப்.3: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார் பில் பெரம்பலூரில் 10 அம் சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரைநாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் நீலமேகம் தலைமை வகித்தார். போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊரா ட்சி எழுத்தர் உள்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போரா ட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சங்கத்தின் பெரம்பலூர் வட்ட செயலாளர் ராஜேந்திரன். மாவட்டத் தலைவர் ராஜகுமாரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அரசு ஓய்வூ தியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: