‘பொள்ளாச்சி’யை சந்திக்கனும்னா பர்ஸ் காலி: புலம்பும் அதிமுகவினர்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில், 6 ஊராட்சிகள் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியிலும், 6 ஊராட்சிகள் பெருந்துறை சட்டமன்ற தொகுதியிலும் மீதமுள்ள கொடுமணல், எல்லைக்கிராமம், புதுப்பாளையம், எக்கட்டாம்பாளையம், பசுவபட்டி, குப்பிச்சிபாளையம், முருங்கத்தொழுவு, முகாசிபிடாரியூர் ஓட்டப்பாறை, கூத்தம்பாளையம் ஆகிய 10 ஊராட்சிகள் காங்கயம் சட்டமன்ற தொகுதியிலும் உள்ளது.

இந்த 10 ஊராட்சிகளை சேர்ந்த அதிமுகவினருக்கு முன்னாள் துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் தான் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கட்சி பணி சம்பந்தமாகவோ அல்லது ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிக்க விரும்பினாலோ இந்த ஊராட்சிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பொள்ளாச்சி சென்றுதான் மாவட்ட செயலாளரை சந்திக்க முடியும்.

மாவட்ட செயலாளரை சந்திக்க சென்றால் போக வர 200 கிமீ தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் ஒரு நாள் முழுவதும் நேரத்தை செலவிட வேண்டும் என்பதோடு பயண செலவு, சாப்பாடு என பர்ஸ் காலியாகி விடுவதாக அதிமுகவினர் புலம்புகின்றனர்.

இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பொள்ளாச்சியில் இருக்கும் எங்கள் மாவட்ட செயலாளரை சந்திக்க சென்றால் வாகன எரிபொருள் செலவு, காலை, மதியம் அல்லது இரவு என இரு வேளை ஓட்டலில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. 5 பேர் சென்றால் குறைந்தது ரூ.5 ஆயிரம் செலவு ஆகி விடுகிறது. இனி தேர்தல் காலம் என்பதால் அதிக செலவு செய்து அடிக்கடி பொள்ளாச்சி சென்று மாவட்ட செயலாளரை சந்திக்க வேண்டியது வரும்’’ என அதிமுகவினர் புலம்புகின்றனர்.

Related Stories: