நாட்டின் மிக பெரிய எண்ணெய்,எரிவாயு ஏலத்துக்கு காலக்கெடு 3 மாதம் நீட்டிப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லியில் நடந்த எரிசக்தி வார விழாவின் போது திறந்தவெளி உரிம கொள்கையின் 10வது சுற்று தொடங்கப்பட்டது. இது ஜூலை இறுதிக்குள் முடிவடையும் என திட்டமிடப்பட்டது. அதை தொடர்ந்து அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. பின்னர் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் பிப்ரவரி 18 2026 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில்,எண்ணெய், எரிவாயு ஏலத்திற்கான சமர்ப்பிப்புக்கு இறுதி தேதி மே 29ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஹைட்ரோ கார்பன் இயக்குனர் ஜெனரல் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை முதலீட்டாளர்களுக்கு புதிய விதிமுறைகளை ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசத்தை வழங்குகிறது, மேலும் இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய ஏக்கர் பரப்பளவான சுமார் 1,91,986 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய 25 இயற்கை எரிவாயு தொகுதிகள் ஏலத்திற்கு உள்ளன. அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்தத் தொகுதிகளில் ஆறு கடற்கரைப் பகுதிகள், ஆறு ஆழமற்ற நீர்ப் பாதைகள் மற்றும் வண்டல் படுகைகளில் பரவியுள்ள ஆழமான நீர்த் தொகுதிகள் ஆகியவை அடங்கும் என்றனர்.

Related Stories: