கேரளாவில் அரசு அலுவலக வேலை நாட்கள் வாரத்தில் 5 ஆக குறைப்பு?

திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள் முதல் சனி வரை என 6 நாட்கள் செயல்படுகின்றன. மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில் கேரள தலைமைச் செயலாளர் ஜெயதிலக் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில் வேலை நாட்களை வாரத்தில் 5 ஆக குறைக்க அனைத்து தொழிற்சங்களும் சம்மதம் தெரிவித்தன. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வேலை நாட்களை குறைப்பது தொடர்பாக அரசுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் ஜெயதிலக் கூறினார்.

Related Stories: