நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும்: மாநிலங்களவையில் பி.வில்சன் எம்.பி தனிநபர் மசோதா

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களைவையில் திமுக எம்பி பி.வில்சன் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். அதில்,‘‘நீதிபதிகளுக்கு நியமனம், பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப அரசியல் சாசன பிரிவுகள் 15, 16,124, 217,224,130 ஆகியவற்றை திருத்த வேண்டும்.

இதனை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, உச்ச நீதிமன்ற கிளைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேப்போன்று அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அனைத்து நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலம் வழக்கு விசாரணை நடத்தப்பட்டால் வழக்கு தாமதமாவது, செலவுகள் குறையும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: