செங்கோட்டையனும், விஜயும் ஊழல்வாதிகள் தான்: சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

 

திண்டுக்கல்: நான் நேர்மையானவன் ஊழல்வாதி இல்லை. எல்லாமே வெள்ளை பணத்தில் தான் வாங்குவேன். என் சம்பளம் இவ்வளவு தான் என்று விஜய் சொல்ல வேண்டியது தானே என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திண்டுக்கல் முத்தழகுபட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது: செங்கோட்டையன் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றவர்.

தண்டனை பெற்றவர். விஜய்யும் கருப்பு பணத்தை வைத்து கொண்டு அரசியல் கட்சி நடத்திகிட்டு இருக்கிறார். இவர்கள் இருவரும் நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் சொல்லவில்லை. விஜய் கருப்பு பணம் வாங்குவது உண்மைதான் என எத்தனை தடவை சொல்வது? என்றார்.

Related Stories: