மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 25க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில், குத்தாலம் ஒன்றிய செயலாளர் விஜிகே.செந்தில் நாதனும் ஒருவர். இவர் ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்தவர். வரும் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம். சீட் தராவிட்டால், கட்சி தாவுவேன் என்றும் மிரட்டுகிறாராம். அவசரப்படாதீங்க என்று ஓ.எஸ்.மணியன் அவரை, ஆறுதல்படுத்தி வருகிறாராம்.
இதுபற்றி மயிலாடுதுறை வட்டார அதிமுகவில் விசாரித்த போது, ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்ட செயலாளராக இருந்தாலும், மயிலாடுதுறைக்கும் அவர் தான் பொறுப்பாளர். இதனால் சீட் கேட்டு, அவரிடம் நிர்வாகிகள் பேசுவது சகஜம் தான். அதற்காக கட்சி தாவுவேன் என்றெல்லாம் செந்தில் நாதன் பேசியிருக்க மாட்டார். வேட்பாளர் தேர்வில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவரின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றனர்.
