வரிக்கான அபராதம் உறுதி; விஜய்க்கு எதிராக நாங்கள் இனி டிரம்ஸ் அடிப்போம்: நயினார் கிண்டல்

 

நெல்லை: விஜய்க்கு விதிக்கப்பட்ட வரிக்கான அபராதம் விவகாரத்தில் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லி வருகிறார். இப்போது தான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். நெல்லையில் அவர் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: வருகிற 1-ந் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதனை திருவிழா போல் நடத்த உள்ளோம்.

இதில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். விஜய்க்கு விதிக்கப்பட்ட வரிக்கான அபராதம் விவகாரத்தில் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் என்று சொல்லி வருகிறார். இப்போது தான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்க தொடங்கியுள்ளது. இனி நாங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்த்து டிரம்ஸ் அடிப்போம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories: