திருமணம் உத்தரவாதம் அளித்து ஏமாற்றினால் பாலியல் வன்முறை வழக்கு தொடர முடியாது : உச்சநீதிமன்றம்

டெல்லி : திருமணம் உத்தரவாதம் அளித்து ஏமாற்றினால் பாலியல் வன்முறை வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 33 வயதான பெண் வழக்கறிஞரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்முறை செய்து ஏமாற்றியதாக ஆண் வழக்கறிஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய சட்டிஸ்கர் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு, ஆண் வழக்கறிஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் திருமணத்தின் பெயரில் நடைபெறும் விருப்ப உறவுகளை பாலியல் வன்முறையாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. இது போன்ற வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிமன்றங்கள் இது போன்ற வழக்குகளை கவனத்துடன் அணுக வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

Related Stories: