சீனாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பீஜிங்: அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் நீடிக்கும் அபாயம் உள்ள நிலையில் சீனாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சீனாவின் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “சர்வதேச எண்ணெய் விலைகளின் அசாதாரண உயர்வின் தாக்கத்தை குறைக்கவும், வாடிக்கயைாளர்களின் சுமையை குறைக்கவும், நிலையான பொருளாதார செயல்பாடு மற்றும் சமூக வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலை ஒரு டன்னுக்கு 1,160 யுவான்(சுமார் ரூ.15676) மற்றும் டீசல் விலை ஒரு டன்னுக்கு 1,115 யுவான்(சுமார் ரூ.15068) உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று(நேற்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.
சீனாவில் தற்போது நான்குமாதங்களுக்கு தேவையான அவசரகால கையிருப்பு உள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கவும், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்படும் இழப்பை குறைக்கவும் இந்த விலை உயர்வு அத்தியாவசியமானதாக கருதப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாகிஸ்தானுக்கு சீன அதிபர் பாராட்டு
இதனிடையே, பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி ஜின்பிங் தன் எக்ஸ் தளத்தில், “ பாகிஸ்தானின் நெருங்கிய நண்பனாக, பாகிஸ்தானின் சாதனைகளை கண்டு சீனா மகிழ்ச்சி அடைகிறது. இருநாடுகளும் 75 ஆண்டுகால தூதரக உறவையும், நட்பையும் பேணி வருகின்றன. இது மேலும் தொடரும்” என வாழ்த்து செய்தி வௌியிட்டுள்ளார்.

Related Stories: