சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டத்துக்கான செலவுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
